காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு, கூட்டரங்கிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மூதாட்டி போலி ஆவணங்கள் மூலம் தனக்கு சொந்தமான 70 சென்ட் இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மாற்றிகொண்டதாக புகாரளித்தார். இதனை ரத்து செய்து, தனது இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறி மூதாட்டி மாவட்ட ஆட்சியர் முன்பாகவே கூட்டரங்கில் தீக்குளிக்க முற்பட்டார்.பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.