சென்னை அண்ணாநகர் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் திடீரென தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. குடோனில் இருந்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்த நிலையில், தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.