நாகையில், வாடிக்கையாளர் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்து தராமல் அலைக்கழித்ததாக தொடர்ந்த வழக்கில், OLA நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த பிரபாவதி, காடம்பாடியில் உள்ள OLA ஷோரூமில் வாங்கிய எலக்ட்ரிக் பைக்கில் அடிக்கடி பழுது ஏற்பட்டதாகவும், அதனை சரிசெய்ய விட்டபோது, நிறுவனம் அலைகழித்ததாகவும் கூறப்படுகிறது.