தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றின் நீர்வரத்து நேற்று 18 ஆயிரம் கன அடியாக இருந்தநிலையில் தற்போது உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது 6ஆவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.