தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 18ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இரண்டாவது நாளாக ஒகேனக்கல் காவேரி ஆற்றின் நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை நான்காவது நாளாக நீடித்து வருகிறது.