திருப்பத்தூர் பிரதான சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலைய பிரதான சாலையில் வைக்கப்பட்டிருந்த கட்சி பேனர்களை அகற்றினர். அப்போது சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.