ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அம்பேத்கர் சிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவை சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அருளவாடி கிராமத்தில் உரிய அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அகற்றுவதற்காக வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சென்ற போது, அவர்களை தடுத்து நிறுத்திய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர் ஒருவர் தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது.