திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் மனைவிக்கு நான்தான் பிரசவம் பார்ப்பேன் எனக் கூறி வீட்டை பூட்டிக் கொண்டு அட்ராசிட்டியில் ஈடுபட்ட வங்கி மேலாளரால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த கஜேந்திரன், கோபால்பட்டியில் உள்ள யூனியன் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. தகவலறிந்து சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார் நேரில் சென்றனர். அதிகாரிகள் எவ்வளவோ எடுத்து கூறியும், கஜேந்திரன் சம்மதிக்காமல் தாங்களே பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது.