சென்னை கொடுங்கையூரில் செயல்பட்டு வந்த எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.