திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியரின் அதிரடி ஆய்வால் அதிகாரிகள் கதிகலங்கி விழிபிதுங்கி நின்றனர். சிறுவானூரில் ரேஷன் கடை, நெமிலி அகரம் பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள், பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருட்கள் மற்றும் மருந்துகள் இருப்பு, மேம்பாலத்தின் தரம் குறித்து கேள்வி கேட்டதால், அதிகாரிகள் விழிபிதுங்கி நின்றனர்.