மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரை 11 ஆயிரத்து 368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ நிர்வாக உயரதிகாரிகளுடன் நெடுஞ்சாலை துறை, குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.