தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை பினாயில் ஊற்றி அழித்தனர். கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கி வருகின்றன. அங்கு ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சென்று மீன்களை சோதனை செய்தனர். அதில் கெட்டுப்போன 150 கிலோ எடை கொண்ட மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர்.