கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது கிடையாது என நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 100 நாள் வேலைத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துகளில் அதிகாரிகள் செய்யும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.