ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பாலாற்று கரையோரம் வியாபாரம் செய்ய பொதுப்பணித்துறையினர் தடுப்பதாக கூறி, காய்கறி கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீர்நிலைக்கு சொந்தமான இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகள் முன்பு பள்ளம் தோண்டி வியாபாரம் நடத்தவிடாமல் அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படுகிறது.