நீதிமன்ற உத்தரவின்படி மதுரை, சோழவந்தான் பள்ளிவாசல் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த காவல்துறையினருக்கும், இஸ்லாமிய பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளிவாசல் அருகே உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதியின்றி பள்ளிவாசல் தரப்பில் கம்பிவேலி அமைத்ததால் அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் ஜேசிபியுடன் வந்த காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்த நிலையில் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.