சென்னை துறைமுகத்தில் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 26 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருட்களை துறைமுக நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துறைமுகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் வந்த இரண்டு கண்டெய்னர்களில் சோதனை செய்தபோது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகைப்படச் சட்டங்கள் இருப்பதாக ஆவணம் இடப்பட்டிருந்தது. ஆனால், கண்டெய்னர்களில் வெளிநாட்டு வாசனை திரவியங்கள், காலணிகள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், மற்றொரு கப்பலில் வந்த ஐந்து கண்டெய்னர்களில் இருந்து தடை செய்யப்பட்ட ட்ரோன்கள், கையடக்க மின் விசிறி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.