திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே போலி மருத்துவரை கைது செய்த அதிகாரிகள், அவர் நடத்தி வந்த மருத்துவமனை மற்றும் மருந்து விற்பனை நிலையத்திற்கு சீல் வைத்தனர். தட்டாங்குட்டை என்ற பகுதியில் மருத்துவம் படிக்காமல் நிம்மி என்ற நிம்மி ஜோஸ் என்பவர் மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது, நிம்மி ஜோஸ் என்பவர் மருத்துவம் படிக்காமலேயே மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.