சிவகங்கை மாவட்டம் வாணியங்குடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அடகு வைத்த நகையை மாற்றி வேறொரு நகையை வழங்கியதாக வாடிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார். மாங்குடி தெற்குவாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், அடகு வைத்த நகையை மீட்க வந்த போது, வங்கி நிர்வாகம் வேறொரு தங்க நகையை கொடுத்ததாக கூறி, அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.