நீலகிரி மாவட்டம் உதகை அருகே இறுதிச்சடங்கு மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டிய நிலையில், அதனை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டும் இன்னும் அகற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியினர் மீண்டும் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். முள்ளிமலை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், அங்கு படுகர் சமுதாய மக்களின் இறுதிச்சடங்கு மற்றும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு மைதானம் ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த மைதானத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் மற்றும் அவருடைய சகோதரர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியதாக கூறப்படுகிறது.