புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். ரெத்தினக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட குறும்பக்காடு பகுதியில் வணிகவரித்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.