சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த செய்களத்தூரில் நாற்றாங்கால் பண்ணை மற்றும் மரக்கன்றுகள் உருவாக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.