விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்வி கட்டணத்தை திரும்ப வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்ட நர்சிங் மாணவிகளை போலீசார் கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமசாமிபுரத்தில் தமிழ்நாடு பெண்கள் கல்லூரி என்ற நர்சிங் கல்லூரி உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த நிலையில் மாணவிகள் கல்வி கட்டணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இந்நிலையில் கல்வி கட்டணத்தை கல்லூரி நிர்வாகம் திருப்பி வழங்காததால் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.