புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் அருகே தனியார் பள்ளி வேனும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 21 பேர் காயம் அடைந்தனர். மாணவர்கள் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு குவிந்து பெற்றோர்கள் கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.முத்துடையான்பட்டியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 30 பேர், வகுப்பு முடிந்ததும் பள்ளி வேனில் வீடு திரும்பினர். ரெங்கம்மாள் சத்திரம் என்ற இடத்தில் வேன் ஓட்டுநர் கவனக்குறைவாக வேனை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியது.