தூத்துக்குடி என்டிபிஎல் அனுமின் நிலையம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி என்.டி.பி.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.