தமிழ்வழி வினாத்தாளில் குளறுபடிகளுடன் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழில் பெரும்பாலான கேள்விகள் பாடத்திட்டத்திற்கு அப்பால், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு மிகக் கடினமானவையாக இடம்பெற்றதும், பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதும், தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள சீமான், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.