பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க திட்டம் தீட்டியதாக ஒற்றைக்கண் ஜெயபால் என்ற ரவுடியை திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் வலதுகரம் போன்று செயல்பட்டு வந்ததாக கூறப்படும் ஒற்றைக்கண் ஜெயபால் மீது ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு உள்பட 13 வழக்குகள் உள்ள நிலையில், சிறையில் இருந்த அவர் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அஸ்வத்தாமன், அஞ்சலை உள்ளிட்ட 18 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயபாலை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.