நெல்லையில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீட் பயிற்சி மையத்திற்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். JAL NEET ACADEMY என்ற நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அதன் உரிமையாளர் ஜலாலுதீன், பிரம்பால் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உரிமையாளர் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அந்த பயிற்சி மையத்தின் மாணவியர் விடுதியில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இதில் அந்த விடுதி உரிய அனுமதி பெறாமல் இயங்கியது தெரியவந்ததையடுத்து அந்த பயிற்சி மையத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.