தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வருவாய்த்துறை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள், தமிழ்நாடு அரசு இடை நிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில், தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.