தூத்துக்குடியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்ய கூறி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாக குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு ராஜீவ் காந்தி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 444 வீடுகள் கட்டப்பட்டன. 20 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்ட வீடுகள் 5 வது ஆண்டே விரிசல் அடைய தொடங்கியதோடு, ஒரு வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து விழுந்ததில், 3 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகளை கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.