திருப்பூர் ரயில் நிலையத்தில் இரவு பகலாக காத்திருந்த புலம் பெயர் தொழிலாளர்கள், நிற்க கூட இடமில்லாத ரயில்களில் ஏற முண்டியடித்தனர். வட மாநிலங்களில் தீபாவளிக்கு மறுநாள் சாத் பூஜா கொண்டாடப்படும் நிலையில், திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்து ஏற்கனவே நிரம்பி வழியும் ரயில்களில் ஏற போட்டி போட்டனர். பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் ஏறி சென்றனர்.