காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் அருகே தனியார் நிறுவன பேருந்து மோதியதில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். மேற்குவங்கத்தை சேர்ந்த பாபி காஜ்டி, டபாஸ் ஆகியோர் செம்பரம்பாக்கம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து மோதியது.