மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள வத்திராயிருப்பு தாலுகாவில், நெல் நடவுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வட மாநிலத்தவர் அதிக அளவில் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம், ரகுமத்நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்ளூரில் போதுமான அளவு ஆட்கள் கிடைக்காததால், வட மாநிலத்தினரை குறைந்த ஊதியத்தில், வேலைக்கு அமர்த்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.மேற்கு வங்கத்தில் இருந்து வந்துள்ள இந்த கூலித் தொழிலாளர்களை கொண்டு நெல் நடவுப் பணி, மும்முரமாக நடைபெற்று வருகிறது.