திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த வடமாநில நபர், நூலிழையில் உயிர் தப்பியதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்த அவரை, சில நொடிகளுக்குள் ரயில்வே தலைமை காவலர் காப்பாற்றினார்.