திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடைக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கிய வட மாநிலத்தவர்களின் அட்டூழியம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல்லடம் பேருந்து நிலையம் முன்பாக வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் கட்டைகளுடன் ஓடி வந்த நிலையில், அருகில் இருந்த சிக்கன் கடைக்குள் புகுந்து பொதுமக்களையும் வாகனங்களையும் தாக்கினர். இதனைத் தொடந்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறு காரணமாக, துரத்தி துரத்தி தாக்கியது தெரியவந்தது.