ஈரோட்டில் பணி புரியும் வெளி மாநில, மாவட்ட பொது மக்கள் தீபாவளியை தங்களது சொந்த ஊர்களில் கொண்டாட புறப்பட்டதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ரயில் நிலையங்களில் அதிகளவு பயணிகள் கூட்டம் காணப்படுவதால் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிகளை ஒழுங்குபடுத்தி ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபடும் ரயில்வே காவல்துறையினர், ரயில் தண்டவளங்களில் ஓரங்களில் நிற்பவர்களை ரயில் வரும் போது முண்டியடித்து கீழே விழாமல் இருக்க, ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணத்தின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறை குறித்து ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.