தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிகளில் ஈடுபட அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 30 பேர் கொண்ட 5 குழுக்களும், சென்னை மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தலா ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளன. மீட்பு உபகரணங்களான ரப்பர் படகுகள், கயிறு, உயிர்காக்கும் கருவிகள் மற்றும் மோப்ப நாய்களுடன் ஆழ்நிலை நீர்முழ்கி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். மாநில அவசர கட்டுப்பாட்டு மையங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையங்கள் இணைந்து செயல்படுவதாக தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவின் துணை கமாண்டண்ட் பிரவீன் பிரசாத் தெரிவித்துள்ளார்.