விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் பார்வையிட்டனர். தவெகவின் முதல் மாநில மாநாடு வி.சாலை பகுதியில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாநாடு நடைபெறும் இடத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ராகார்க், டிஐஜி திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.