ரீல்ஸ் செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் கல் வைத்த வடமாநில இளைஞர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். கடந்த மாதம் 25-ம் தேதி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தபோது, கடையநல்லூர் - பாம்புகோவில் சந்தைக்கு இடையே தண்டவாளத்தில் பெரிய கல் இருந்தது தெரியவந்தது. இந்த கல்லில் மோதிய பொதிகை எக்ஸ்பிரஸ் கொஞ்ச தூரம் சென்று நின்ற நிலையில், ரயில் இன்ஜின் ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்த சூழலில், அருகிலுள்ள கல்குவாரியில் வேலை செய்துவரும் வடமாநில இளைஞர்கள் இருவர் ரீல்ஸ் செய்வதற்காக ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்தது தெரியவந்தது.