வலது கால் அகற்றப்பட்ட வடமாநில கொள்ளையன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளான். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில், மூன்று ஏ.டி.எம்.,களை உடைத்து கொள்ளையடித்த, வட மாநில கும்பலை, நாமக்கல் மாவட்டத்தில், தமிழக போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஆசர் அலி, என்பவரின் இரண்டு கால்களிலும், குண்டு பாய்ந்து காயங்கள் ஏற்பட்ட நிலையில் வலது கால் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததையும், அப்படியே விட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் அறிந்த மருத்துவர்கள் காலை வெட்டி அகற்றினர்.