நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்க கோரி, அதிமுக உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சி ராணி பதவி வகித்து வரும் நிலையில், அவருக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து. நடைபெற்ற வாக்கெடுப்பிற்கு ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் வருகை தந்ததால் வாக்கெடுப்பு நடத்தாமலும், எந்த வித முடிவுகளும் அறிவிக்காமல் பேரூராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.