தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி மீது இரண்டாவது முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கவுன்சிலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சங்கரன்கோவில் நகர்மன்ற உறுப்பினராக இருக்கும் மகேஸ்வரி மீது திமுக, அதிமுக கவுன்சிலர்கள் உட்பட கடந்த 2023ஆம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். ஆனால் தொடர்ந்து நகர்மன்ற தலைவியாக செயல்பட்டு வரும் மகேஸ்வரி மீது குடிநீர் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், மூன்று மாதங்களாக நகர்மன்ற கூட்டம் நடைபெறவில்லை எனக் கூறி 23 கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து நகராட்சி ஆணையரிடம் கடிதம் வழங்கினர்.இதையும் படியுங்கள் : ஆபத்தான முறையில் பவானி ஆற்றை கடக்கும் மாணவர்கள்... உயர்மட்ட பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை