அதிமுக மீது எத்தனை வழக்குகள் போட்டலும் எவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தாலும் அதனை மக்கள் துணை கொண்டு தவிடுபொடியாக்குவோம் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பேசிய அவர், எத்தனை உருட்டல் மிரட்டல்கள் விடுத்தாலும் அதிமுக என்றும் அடிபணியாது என்றார்.