தருமபுரி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் கரப்பான் பூச்சி, மூட்டைப் பூச்சித் தொல்லை அதிகளவு உள்ளதாக பயணிகள் புகார் கூறுகின்றனர். நீண்ட தூரம் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் பராமரிப்பு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.