காரைக்குடி மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 22 வது வார்டு கவுன்சிலர் ராம்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநகராட்சியில் உள்ள 35 கவுன்சிலர்களில் 23 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.