கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தென்குத்து பகுதியில் இழப்பீடு வழங்காத நிலங்களில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்த கிராம மக்கள், ஹிட்டாச்சி வாகனங்களை சிறைபிடித்தனர். முன்னறிவிப்பு இல்லாமல், என்எல்சி நிர்வாகம் பணியை மேற்கொண்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சிறை பிடிக்கப்பட்ட வாகனங்களை மீட்டனர்.