திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிவில் நீதிமன்றத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்தார். நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் உள்ள சிவில் நீதிமன்றத்திற்கு மேலக்கோவில்பட்டியை சேர்ந்த நடராஜன் என்பவர் நிலம் தொடர்பான வழக்குக்காக வந்திருந்தார். நீதிமன்றத்தில் காத்திருந்தபோது அவர் மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்தார். மேற்கூரை ஆங்காங்கே சேதமடைந்ததால் சீரமைத்து தர வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.