நெய்வேலி என்.எல்.சி.யில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் தங்களை NON AMC ஒப்பந்த தொழிலாளர்களாக அறிவிக்கக்கோரி 2வது சுரங்கம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகள் என்ற அடிப்படையில் பணிக்கு சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களை NON AMC ஒப்பந்த தொழிலாளர்களாக அறிவிக்கக்கோரி கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய என்எல்சி நிர்வாகம் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அறிவிப்பை வெளியிடுவதாக உறுதியளித்திருந்தது. நிர்வாகம் கூறியபடி அறிவிப்பை செயல்படுத்தாததால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.