நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி எதிரொலியாக, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் இரவோடு இரவாக நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. கோவில்பாளையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை, அரசு நேரடி கொள்முதல் நிலையம் முன்பு குவியல் குவியலாக விவசாயிகள் கொட்டி வைத்திருந்தனர். கனமழை காரணமாக நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டதால், அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதனையடுத்து, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு நெல் கொள்முதல் பணியை உடனடியாக தொடங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.