நியூஸ் தமிழ் செய்தி எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கனரக வாகனங்களில் டீசல் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். சிவ சக்தி பஞ்சர் கடையில் லாரி ஓட்டுநர்கள் உதவியுடன் டீசல் திருடப்படுவதாக, செய்தி வெளியானதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் அடைத்து வைத்திருந்த சுமார் 300 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.