36 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அதிகாரிகளின் அலட்சியத்தால் கிடப்பில் போடப்பட்ட பொதுகழிப்பிடம் தற்போது நியூஸ் தமிழ் செய்திய எதிரொலியால் மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது; ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் சாலையில் மண்டலம் ஒன்றில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தின் சார்பாக 36.28 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடமானது கட்டப்பட்டு அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் ஒரு வருட காலம் மக்களின் பயன்பாட்டிற்கு விடாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் நிதியை ஒதுக்கி பொதுக்களிப்பிடம் கட்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர் இதனை நமது நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட்டிருந்தோம் மேலும் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொதுமக்களும் கோரிக்கை எழுப்பி வந்தனர் இதனைத் தொடர்ந்து தற்போது மாநகராட்சியின் அதிகாரிகள் முன்வந்து ஒரு வருட காலமாக மூடப்பட்டிருந்த பொது கழிப்பிடத்தை தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு விட தொடங்கினர் ஒரு வருட காலமாக மூடி இருந்த கழிப்பிடத்தை தற்போது பயன்பாட்டிற்கு விட்டதால் பொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.